Thursday, May 21, 2009

பிரபாகரன் சர்ச்சை -ஆனந்த விகடனின் இரட்டை வேடம்

ஆனந்த விகடன் எப்போதும் தான் ஒரு வியாபாரி என்பதையே நிருபித்து வருகிறது ..சமீபத்திய தனது ஜுனியர் விகடன் இதழில் பிரபாகரன் இறப்புக்கு ஆதாரங்கள் எதுவும் சரியாக காண்பிக்காமல் இலங்கை அரசு மழுப்புகிறது என கார சாரமாக கட்டுரை வெளியிட்டது .ஆனால் அதிர்ச்சி தரும் படி .பிரபாகரன் இறந்து விட்டார் என்பது போல ,அஞ்சலி கட்டுரை போல தமிழ் ஈழம் அவ்வளவு தானா என்கிறது .
தமிழர்களின் சோகத்திலும் சோறு தின்னும் ஆட்களை என்ன செய்வது ...

பிரபாகரன் உயிருடன் உள்ளார் .நலமாக பத்திரமாக உள்ளார் என்பதற்கு கடந்த காலங்களில் அவர் தனது உயிரை ம்காப்பற்றி கொள்ள எவ்வளவு உசாராக இருந்தார் என்பதை பல மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டன .மேலும் அவரை சுற்றி எப்போதும் இருக்கும் இருநூறு கரும் புலிகளும் நம்பிக்கை தருகின்றனர் ..

இலங்கை வன்னி காடுகளின் நிலவரத்தை அங்குள்ள நில அமைப்பை எந்த சர்வதேச மீடியாக்களும் ,இலங்கை ராணுவமும் அறிய வாய்ப்பில்லை .அப்படியிருக்க அவர் தப்பியிருக்க முடியாது என சொல்ல இயலாது .
மரபணு சோதனை நடத்த வேண்டும் என குரல் கேட்க ஆரம்பித்ததுமே ..பிரபாகரன் குடும்பமே காலி என மறுபடி கதை கட்டி உள்ளது இலங்கை.

மீண்டும் அவர் வருவார்.இந்த சமயத்தில் மிகுந்த தைரியத்தை அளித்த பல.நெடுமாறன் ,மற்றும் நக்கீரனுக்கு நன்றி.

##கலைஞர் காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளார் .சோனியாவை பணிய வைக்கும் இந்த முயற்சி தோற்று கலைஞர் வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு தர வேண்டும். ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து காங்கிரசுக்கு அவர் கடும் நெருக்கடி தர வேண்டும் .இதன் மூலம் தமிழ் உணர்வலையை தமிழகத்தில் தட்டி எழுப்பலாம் ..
தள்ளாத வயதில் பாத்ரூம் போக முடியாதவர் ,டெல்லி போயிருக்கிறார் என்றால்
தமிழனுக்காகவா .../தமிழனின் பொறுமையை நினைத்தால் எரிகிறது ...

#மணப்பாக்கம் எனும் தளத்தில் மணிவண்ணன் எழுதிய கமென்ட் கீழே :
இந்தியாவை
கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ! கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ? எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே? ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது,-