ஜுனியர் விகடன் இன்றைய இதழில் இலங்கை தமிழர் செய்திகள் அதிகம் காணப்பட்டன. சீமான் பேட்டிசிறப்புடன் இருந்தது. அதைவிட இலங்கை தமிழர்கள் பலர் ராணுவத்தை நம்பி புலிகள் கட்டுபாட்டு பகுதியை விட்டு வெளியேறிய பொது என்ன நடந்தது என்பதை விவரிக்கும் ஒரு முல்லை தீவு கடிதம் கண்களை குளமாக்குகிறது ....]
ஐயா..கனவான்களே..இதை கண்கொண்டு பார்த்தபின்பும் இந்த ஈனப்பட்ட ஈழ சொந்தங்களுக்காக ஏதாவது செய்யாமல் இருப்பீர்களா? ஐயோ..தயவுசெய்து தீக்குளிகாதீர்கள்.. நீங்கள் குளிக்க குளிக்க..அங்கே உங்கள் அரசு மேலும் மேலும் போசுபரசை வழங்கிக்கொண்டே இருக்கிறது...உலக நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒன்றுமே நடக்க முடியாமல்தான்.. உங்களிடம் உயிர் பிச்சை கேக்கிறார்கள். ஆறரைக்கோடி பேரும் சேர்ந்து ஏதாவது செய்யுங்கள் உறவுகளே ...
உண்மைதான் என் அண்ணன் (பிரபாகரன்) செத்துத்தான் போய் விட்டான்.
தோல்வி ஒரு பக்கம், அவமானம் மறுபக்கம்! மரணமும் அவனை ரகசியமாகவே சந்தித்தது. அந்த மூன்று நாட்களும் சூரியன் வரவேயில்லை. மறையுருவில் நான் அவனுக்கு ஆத்ம சாந்தி செய்தேன். அவன் என்னை அடுத்த பட்டத்துக்கு அபிஷேகம் செய்வித்தான். விழிகளை ஏனோ அவன் மூட மறுத்து விட்டான்.
தோற்றது என் அண்ணன்தான் (பிரபாகரன்) சத்தியமும் நீதியுமல்ல! அவன் இறுதியாய் என் காதில் கூறியது எதிரொலிக்கிறது. 'தம்பி, என் துப்பாக்கிக்குப் பதிலாய் சத்தியத்தை நீ தாங்கிக்கொள். நான் உன்னுள் இருக்கிறேன். ஏற்றுக்கொள் தமிழ்ப் படையை வெற்றி மானுட விடுதலை ஆகட்டும்" நெற்றி பிளந்த ரத்தக் குளத்தில் என் கரங்களை பற்றிப் பிடித்துக் கொண்டான்.
"தம்பி நான் அனாதையாக சாகிறேனோ?" என்றான். அண்ணா, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உன்னை உலகம் புரிந்து கொள்ளும். உனது நிலையை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள். நீ விழுந்த இடங்களிலே உன்னுள் இருந்தே நான் எழுவேன். மறக்காதே. நான் இருக்கிறேன்!" என்றேன். துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்னைப் பற்றியிருந்த கரங்களில் இயக்கம் ஓய்ந்து போனது.
"உலகமே, என் மரணத்தைப் பார்க்கத்தானே இத்தனை நாள் ஆசைப்பட்டாய். இதோ மரணமே உன்னைப் பார்த்தபடியே நான் மரணிக்கிறேன்" என்று கூறுவது போலவே விழிகளை ஏனோ அவன் மூட மறுத்து விட்டான்.
இதோ, பிரபாகரனின் தம்பி வந்திருக்கிறேன். உலகையே கூட்டி உரக்கச் சொல்கிறேன். என் அண்ணனுக்கு நேர்ந்த என் தாய்க்கு விளைந்த களங்கம் துடைக்க இளையன் வந்திருக்கிறேன்.
இனித் தமிழ் உலகாளும்.
போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் குராத்தன்ன என் ஐ இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே!
7 comments:
:((((((((((((((((((((((((((( வேர என்ன சொல்ரதுக்கு இருக்கு :((((((((((((((((((
நன்றி சுப்பு சார் ..வேதனையும் கண்ணீரும் ...நிறைந்த இந்த கடிதம்
உறைய வைக்கிறது '''என்று தீருமிந்த சோகம் ....
ஒன்றும் செய்ய முடியாதவனாய் நிற்கிறோமே....
:(
//ஒன்றும் செய்ய முடியாதவனாய் நிற்கிறோமே....//
http://osaichella.blogspot.com
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
ஐயா..கனவான்களே..இதை கண்கொண்டு பார்த்தபின்பும் இந்த ஈனப்பட்ட ஈழ சொந்தங்களுக்காக ஏதாவது செய்யாமல் இருப்பீர்களா? ஐயோ..தயவுசெய்து தீக்குளிகாதீர்கள்.. நீங்கள் குளிக்க குளிக்க..அங்கே உங்கள் அரசு மேலும் மேலும் போசுபரசை வழங்கிக்கொண்டே இருக்கிறது...உலக நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒன்றுமே நடக்க முடியாமல்தான்.. உங்களிடம் உயிர் பிச்சை கேக்கிறார்கள். ஆறரைக்கோடி பேரும் சேர்ந்து ஏதாவது செய்யுங்கள் உறவுகளே ...
உண்மைதான் என் அண்ணன் (பிரபாகரன்) செத்துத்தான் போய் விட்டான்.
தோல்வி ஒரு பக்கம், அவமானம் மறுபக்கம்!
மரணமும் அவனை ரகசியமாகவே சந்தித்தது.
அந்த மூன்று நாட்களும் சூரியன் வரவேயில்லை.
மறையுருவில் நான் அவனுக்கு ஆத்ம சாந்தி செய்தேன்.
அவன் என்னை அடுத்த பட்டத்துக்கு அபிஷேகம் செய்வித்தான்.
விழிகளை ஏனோ அவன் மூட மறுத்து விட்டான்.
தோற்றது என் அண்ணன்தான் (பிரபாகரன்) சத்தியமும் நீதியுமல்ல!
அவன் இறுதியாய் என் காதில் கூறியது எதிரொலிக்கிறது.
'தம்பி, என் துப்பாக்கிக்குப் பதிலாய் சத்தியத்தை நீ தாங்கிக்கொள்.
நான் உன்னுள் இருக்கிறேன். ஏற்றுக்கொள் தமிழ்ப் படையை
வெற்றி மானுட விடுதலை ஆகட்டும்"
நெற்றி பிளந்த ரத்தக் குளத்தில் என் கரங்களை
பற்றிப் பிடித்துக் கொண்டான்.
"தம்பி நான் அனாதையாக சாகிறேனோ?" என்றான்.
அண்ணா, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உன்னை உலகம் புரிந்து கொள்ளும்.
உனது நிலையை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்.
நீ விழுந்த இடங்களிலே உன்னுள் இருந்தே நான் எழுவேன்.
மறக்காதே. நான் இருக்கிறேன்!" என்றேன்.
துக்கம் தொண்டையை அடைக்கிறது.
என்னைப் பற்றியிருந்த கரங்களில் இயக்கம் ஓய்ந்து போனது.
"உலகமே, என் மரணத்தைப் பார்க்கத்தானே இத்தனை நாள் ஆசைப்பட்டாய்.
இதோ மரணமே உன்னைப் பார்த்தபடியே நான் மரணிக்கிறேன்" என்று கூறுவது போலவே
விழிகளை ஏனோ அவன் மூட மறுத்து விட்டான்.
இதோ, பிரபாகரனின் தம்பி வந்திருக்கிறேன். உலகையே கூட்டி உரக்கச் சொல்கிறேன்.
என் அண்ணனுக்கு நேர்ந்த
என் தாய்க்கு விளைந்த களங்கம் துடைக்க
இளையன் வந்திருக்கிறேன்.
இனித் தமிழ் உலகாளும்.
போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் குராத்தன்ன என் ஐ
இளையன் என்று இகழின்
பெறல் அரிது ஆடே!
Post a Comment