Tuesday, February 17, 2009

இந்தியா கோழை நாடா ?


இந்திய பண்பாடு தொன்மையானது .இந்திய பெண்கள் கலாசாரம் நிரம்பியவர்கள் ,ஒழுக்கம் நிறைந்தவர்கள் .,இந்தியர்கள் சுறுசுறுப்பு உடையவர்கள் ,இந்திய கோவில்கள் கலை நுணுக்கம் உடையவை ,இந்திய மக்கள் அன்பு நிறைந்தவர்கள் ..
இதெல்லாம் சரி .ஆனால் இந்தியா வீரம் மிக்க நாடா ?
இந்த கேள்விக்கு பதில் உண்டா ?

இதென்ன கேள்வி ?கார்கில் யுத்தத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டினோமே என்கிறீர்களா?

அது இல்லை .எதிரிகள் வந்த பின் பாதி அளவுக்கு உள்ளே நுழைந்து ,ஒரு வழி செய்த பின்னர் ,எதிர் தாக்குதல் நடத்தி முக்கி திணறி அவர்களை அவர்கள் எல்லைக்கு தள்ளுவதற்கு பெயர் வீரமா ?

அல்லது முன்கூட்டியே யூகம் செய்து ,அவர்களை எச்சரித்து ,அதன் பின்னரும் அவர்கள் வாலாட்ட நினைத்தால் வாலைஓட்ட நறுக்குவது ..அதுவும் நம் நாட்டுக்குள் நுழையும் முன்னரே செய்வது வீரமா ?

அய்யா ..ஜனநாயகம் என்பதும் ,அமைதியுடன் இருப்பதும் , தாக்குதல் நடத்தி பேரிழப்பு செய்த பின்னரும் ,சொரணை கெட்ட தனமாகஅவர்களை ஏதும் செய்யாமல் ..இந்திய அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு என ஓராயிரம் தடவை தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லி கொண்டிருப்பதன் பெயர் ,
ராஜ தந்திரமா ?

ஈராக் ..எப்போதாவது அணு ஆயுதத்தால் தாக்குமோ என சந்தேகப்பட்டு ,அதன் அதிபரையே தூக்கில் ஏற்றியவர்கள் அமெரிக்கர் கள்...
அட..நீங்க அது மாதிரி செய்ய வேண்டாம்... மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாத கூடாரங்கள் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை என்றால் எப்படி ?

இதை எச்சரிக்கை செய்து கொண்டே காலம் கடத்தும் அரசியல்வாதிகள் ராஜ தந்திரம் என்கிறார்கள் ...
அரசியல்வாதிகள் கோழையாக இருக்கட்டும் ..அதற்காக கடும் பயிற்சி கொடுக்கப்பட்ட வீரர்களையும் முக்கியமான நேரத்தில் பயன்படுத்தாமல் துரு பிடிக்க செய்வது ஏன் ?
ஐந்தாயிரம் எதிரிகளின் கூடாரங்கள் குறி வைத்துள்ளோம் .ஒரே நேரத்தில் ,நிமிடத்தில் அத்தனையும் அழிப்போம்..எங்களுக்கு தேவை உத்தரவு மட்டுமே ..!

என ராணுவ தளபதி உற்சாகமுடன் ,வீரமுடன் பலமுறை கூறினார் ..செவி மடுக்க ஆள் இல்லை ...

தலிபான்களால் இந்தியாவிற்கு பெரிய ஆபத்து ஏற்பட போவதாக ,அமெரிக்க வெளியுறவு செயலர் எச்சரிக்கை செய்துள்ளார் .கவலை தரும் இந்த செய்தியையும் எருமை மேல் பெய்த மழைபோல தான் பாவிக்க போகிறார்கள் ..

இந்திய சொரணை தெரிந்து தான் ..ராஜபக்சே.., ஐ.நா உட்பட எந்த நாடு சொன்னாலும் தமிழர் மீது தாக்குதல் தொடரும் என கொக்கரிக்கிறார் ...

வீரமற்ற எந்த நாடும் முன்னேறாது என திருவள்ளுவர் அறத்துப்பாலில் கூறுகிறார் ..
பெண் தலைமை ஆட்சி பெண்மை தனமாகத்தான் இருக்குமோ ...ஜெ வைஇந்த லிஸ்டில் சேர்த்த இயலாது .அவர் எந்த விசயத்தையும் திசை திருப்புவதில்லை .
அதை கூர் மழுங்க செய்வதில்லை ...

4 comments:

கோவி.கண்ணன் said...

///ஈரான் ..எப்போதாவது அணு ஆயுதத்தால் தாக்குமோ என சந்தேகப்பட்டு ,அதன் அதிபரையே தூக்கில் ஏற்றியவர்கள் அமெரிக்கர் கள்...
//

வால்பையன் கூட டாஸ்மாக் பக்கம் போய் வந்திங்களா ? ஈராக் அதிபர் சதாமை தானே தூக்கில் போட்டாங்க.

வால்பையன் said...

சதாமை தூக்கில காரணம் குர்தீஷ் இனத்தவரை வன்கொலைகள் செய்தது(தற்போது ஈழத்தில் நடப்பது போல்)

எப்போ டாஸ்மாக் போகலாம்?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப சந்தோசம் .உங்க ரெண்டு பேரோட வருகைக்கும்.,கண்டுபிடிப்புக்கும்.
தப்ப கண்டுபிடிச்சதும் வால்பையன் முகத்துல ஒரே சந்தோசம்

வால்பையன் said...

//தப்ப கண்டுபிடிச்சதும் வால்பையன் முகத்துல ஒரே சந்தோசம்//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு,
என்னவோ இந்த பதிவுல மட்டும் தான் தப்பு இருந்தா மாதிரியும், மத்த பதிவெல்லாம் சரியா எழுதின மாதிரியும் இருக்கு உங்க பதில்.

Post a Comment