| ""சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ்.... ''- சிவரஞ்சனி, தஞ்சாவூர். "" கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் கர்ப்பமான பெண்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட 50 லட்சம் வரை அதிகரித்திருக்கிறது. இந்த அளவு அபார ஏற்றம் இதுவரை மற்ற இந்திய மாநிலங்களில் பதிவானது இல்லை. குடும்ப நல அதிகாரிகள் காரண காரியத்தை அலசி ஆராய்ந்தால், கண் சிமிட்டிச் சிரித்ததாம்.... ஒரே காரணம் "பவர்கட்' !
| ![]() |
"" அவற்றின் அர்த்தம் தெரியாமல் சடங்காக மாற்றிக் கடைபிடிக்கும்போது, ஓஷோ பிறப்பால் ஒரு ஜெயின். ஆனால், சமண மதத்தில் காரணம் தெரியாமலே கடைபிடிக்கப்படும் விடாப்பிடியான பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சித்தார். ஒரு முறை அவர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது, எதிர்அறையின் ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சி அவரைக் குழப்பமடைய வைத்தது. விரிப்புகள் இல்லாத மரக்கட்டில். அதில் இரண்டு மனிதர்கள் நெளிந்தபடி நாள் முழுவதும் படுத்துக்கிடந்தார்கள். மாலையில் அவர்கள் வெளியே வந்தவுடன், ஓஷோ கூப்பிட்டு விசாரித்தார். மரக்கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகள் ரத்தம் குடிக்காமல் செத்துவிடும் என்பதற்காக சமண முனிவர்கள் அந்த இருவரையும் மூட்டைப்பூச்சிகள் ரத்தம் குடிப்பதற்காக வாடகைக்கு நியமித்திருந்தார்களாம்.
"" மூட்டைப் பூச்சிகளுக்காகக் கவலைப்பட்டவர்கள், அந்த இரண்டு மனிதர்களுக்காக கவலைப்படவில்லையே'' என்கிறார் ஓஷோ. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது சமண மதத்தின் உன்னதமான கோட்பாடு. ஆனால், அதன் அர்த்தம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும்போது, அதுவே வன்முறையாகவே மாறி விடுகிறது !''
"" தாய்'' - சிறு குறிப்பு வரைக.'' - ர.சௌந்தர்யா, திருப்பூர்.
"" பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் நான் படித்த இந்தக் கவிதையை நீங்களும் படியுங்கள்.
மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
" சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''
நன்றி-தினமலர்,ஆனந்த விகடன்







5 comments:
நல்ல பணி!
ஆனால் நான் இந்த புத்தகம் வாங்கிட்டேனே!
வேற புத்தகம் படிச்சா அப்படியே வலை ஏத்திடுங்க
தாய் கவிதை அற்புதம்.. :-) நான் இன்னும் இந்த புத்தகம் படிக்கலை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!
அட.. ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கீங்க.உங்க ப்ளாக் ல கமென்ட் போட முடியல ....ஏன்..ஏன்....வருகைக்கு நன்றி
நல்ல பணி!
ஆனால் நான் இந்த புத்தகம் வாங்கிட்டேனே!
வேற புத்தகம் படிச்சா அப்படியே வலை ஏத்திடுங்க//ஈயடிச்சான் காபி நு கிண்டல் பண்றீங்க...புரியுது..புரியுது...நீங்க படிக்காத புகக் ல இருந்து இன்னொன்னு காபி அடிச்சு போட்ருக்கேன் ,,பாருங்க...
தாய் கவிதை அற்புதம்.. :-) நான் இன்னும் இந்த புத்தகம் படிக்கலை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!//
அப்பாடி மானத்தை காப்பத்திட்டீங்க...எங்க எல்லோரும் படிச்சத ,காப்பி அடிச்சுட்டேன் நோ நு நினச்சேன் ,வருகைக்கு நன்றி அன்பரே ,,
Post a Comment