இலங்கை தமிழர் விவகாரத்தில் கலைஞர்க்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது;அவர்களின் கண்ணீர் துடைக்கபட்டுள்ளது;இனி அவர்கள் கலங்க வேண்டியதில்லை.தமிழினத்தின் காவல் தெய்வம் ,,,உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் ..இலங்கை தமிழர்களின் கண்ணீர் துடைக்க ..எடுத்த அதிரடியான ...சிங்களர்களை நடுங்க வைக்கும் ...முடிவான ,நிவாரண நிதி ..அதாவது இலங்கை தமிழன் ..நாயடி பேயடி வாங்கி டவுசர் கிழிந்து போய் இருக்கும் அவன் ,கை கால் உடைந்து ...ஒளிந்து வாழும் அவன் ...புது டவுசர் தைத்து கொள்ளவும் ....வயிறார சாப்பிட்டு விட்டு ....(.மீண்டும் பொ...இல் உதை வாங்க தெம்பு வேணுமே )உயிர் வாழ ? கலைஞர் திரட்டும் நிவாரண நிதி இன்று மட்டும் ஐந்து கோடி வசூல் ஆகி உள்ளதாம் ....
நிவாரண நிதி சேர்த்து .உணவு பொட்டலம் சேர்த்து கொண்டு வருகிறோம்....இலங்கை தமிழா.....அதுவரை உன் கர்ப்பிணி மனைவி யையும் .வயதான அப்பன்,ஆத்தாவையும்,சிறு குழந்தைகளையும் ஒரு புதருக்குள் பத்திரமாய் வையடா...அங்கே பாம்பு இல்லாமலும் பார்த்து கொள்ளடா....
நம் தலைவர் ..உனக்காக இங்கே பிச்சை எடுக்கிறார் ரடா....நீயும் நானும் ஒரு இனம் அதை மறந்து விடாதே....நமக்கிடையில் கடல் உண்டு மறவாதே....அந்த கடல் நீர் உன் கண்ணீர் என்பதை நானும் மறவேன்..இன்று உன் வீட்டில் என்ன துக்கம் என்பதை எண்ணியே என் ஒவ்வொரு மணி துளிகளும் செல்கிறது...என கவிஞன் கள் கண்ணீர் வடிப்பார்...
நாம் ஒற்றுமையுடன் இருப்போம் ..மத்திய அரசை வீணாக விமர்சித்து என் பொழப்பை கெடுக்காதே என அரசியல் வாதி நீலி கண்ணீர் வடிப்பான் ..
என் தமிழன் புழுக்கம் தாங்காமல் தான் கண்ணீர் வடிப்பான்...ஏனெனில் அவன் அவேசபட்டால் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வருமே.....இந்தியன் அல்லவா..அதையும் கருத்தில் கொண்டு .....ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு கத்திரிக்காய் வாங்கி சோறு தின்னும்....எம் தமிழர்களை ...நீ ஒரு வேளை!உயிர் பிழைத்து அகதியாய் கரை ஒதுங்கும் போதுஏதேனும் கேள்வி கேட்டு விடாதே.....நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்து விடும் .....
அப்படி கேட்டாலும் கலங்க மாட்டேன் ..ஏனெனில் உனக்காக நான் ...இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ..நூறு ரூபாய் அனுப்பி விட்டேன்....
இந்த வர ஜுனியர் விகடன் இதழில் ...எந்த தமிழ் ஆண் மகனும் கேட்க துணியாத ..கேள்விகளை அரசியல் வாதிகளை பார்த்து ,கவிஞர் தாமரை கேட்டு உள்ளார்..அந்த கேள்விகனைகள் சாதாரணம் அல்ல....அந்த பெண்ணுக்காக நீ பிரார்த்தனை செய்..இலங்கை தமிழா...
இலங்கை பிரச்சனை யை கலைஞர் தீர்க்கவே முடியாது...என தீர்க்க தரிசனத்துடன் இன்று அறிக்கை விட்டுள்ள புரச்சி தலைவிக்கு ஒரு சபாஸ் சொல்லு.
கலைஞர் தந்திரம் கற்று கொண்டு ..மும்பை யில் வடக்கத்தியார் தாக்க படுவதை கண்டித்து ..லாலு தன் கட்சியினரை ராஜினாமா செய்ய சொன்ன ...விவகாரத்தில் இருந்து ..கலைஞர் ராஜதந்திரம் எத்தனை அரசியல் வாதிகள் பிழைப்பு ஓட்ட ..உதவி செய்கிறது...எண்ணி பாரு ...
Saturday, November 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)






13 comments:
கொதிப்பான உணர்வுகளை நிலை தடுமாறாமல் சொல்லியுள்ளீர்கள்.
//நிவாரண நிதி சேர்த்து .உணவு பொட்டலம் சேர்த்து கொண்டு வருகிறோம்....இலங்கை தமிழா.....அதுவரை உன் கர்ப்பிணி மனைவி யையும் .வயதான அப்பன்,ஆத்தாவையும்,சிறு குழந்தைகளையும் ஒரு புதருக்குள் பத்திரமாய் வையடா...அங்கே பாம்பு இல்லாமலும் பார்த்து கொள்ளடா....
நம் தலைவர் ..உனக்காக இங்கே பிச்சை எடுக்கிறார் ரடா....நீயும் நானும் ஒரு இனம் அதை மறந்து விடாதே....நமக்கிடையில் கடல் உண்டு மறவாதே....அந்த கடல் நீர் உன் கண்ணீர் என்பதை நானும் மறவேன்..இன்று உன் வீட்டில் என்ன துக்கம் என்பதை எண்ணியே என் ஒவ்வொரு மணி துளிகளும் செல்கிறது...என கவிஞன் கள் கண்ணீர் வடிப்பார்...//நாம் ஒற்றுமையுடன் இருப்போம் ..மத்திய அரசை வீணாக விமர்சித்து என் பொழப்பை கெடுக்காதே என அரசியல் வாதி நீலி கண்ணீர் வடிப்பான் ..//
தங்களின் சுயநலத்துக்காக பொது நலமாம் ஈழ பிரச்சினையை கையில எடுத்து தங்களை காப்பாற்றிக்கொண்டார்கள் என்பதே உண்மை.
செருப்பல அடிச்சாலும் இவங்களுக்கு புத்தி வராது.
இவர்கள் அரசியல் வியாதிகள்
ஒப்பாரிய நிறுத்துங்கடா வெண்ணைகளா. ஆயுதத்தை தூக்கிக்கொண்டு சண்டைக்கு கிளம்பும்போது கலைஞரிடம் கேட்டுக்கொண்டா புலிகள் சென்றார்கள்.கலைஞரால் அளிக்கமுடிவதெல்லாம் தார்மீக ஆதரவு மட்டுமே.
அட...வெண்ண ஜாலி ஜம்பர்.....கருணாநிதிய கேட்டுகிட்டு ...சண்டை போட ..அவங்க என்ன ....அழகிரிய...ஸ்டாலின .....இல்ல வெகுண்டு எழு ன்னு சொன்னதும் வன்முறை செய்யும் தி.மு.க ரவுடியா ....புலி டா .புலி
.....ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு கத்திரிக்காய் வாங்கி சோறு தின்னும்....எம் தமிழர்களை ...நீ ஒரு வேளை!உயிர் பிழைத்து அகதியாய் கரை ஒதுங்கும் போதுஏதேனும் கேள்வி கேட்டு விடாதே.....நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்து விடும் .....
நெத்திஅடி....ஆர்.கே.சதீஷ்குமார்
கொதிப்பான உணர்வுகளை நிலை தடுமாறாமல் சொல்லியுள்ளீர்கள்.//
நன்றி நண்பரே....தங்களின் விமர்சனத்திற்கு ....வருகைக்கு....அடிக்கடி வாங்க....
இதில் கலைஞரை மட்டுமே ஏன் எல்லோரும் குறை சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போது மற்ற கட்சிகள் செய்ததைவிட, அவர் (அதிகமாக) முடிந்ததைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். இன்னும் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வேறு, இதையே சாக்காக வைத்து அவரை குறை சொல்வதென்பது வேறு.
தங்களின் சுயநலத்துக்காக பொது நலமாம் ஈழ பிரச்சினையை கையில எடுத்து தங்களை காப்பாற்றிக்கொண்டார்கள் என்பதே உண்மை.
செருப்பல அடிச்சாலும் இவங்களுக்கு புத்தி வராது.//
அதையும் வாங்கி குவானுங்க ...பதவிக்காக .....
நெத்திஅடி....ஆர்.கே.சதீஷ்குமார்
//வருகைக்கு நன்றி காந்தி ..
இதில் கலைஞரை மட்டுமே ஏன் எல்லோரும் குறை சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.//
புரியவில்லை என்று நீங்கள் சொல்வது தான் புரியவில்லை.../எத்தனையோ போராட்டங்களை நடத்திய கலைஞர் ,,இலங்கை தமிழனுக்காக உண்டியல் குலுக்க மட்டுமே முடிந்தது ..கவலை தரும் விஷயம் ...தான் விரும்பும் பதவிக்காக பிரதமரை நேரில் சந்தித்தும்,போனிலும் மிரட்ட தெரிந்த வருக்கு ..நாலு மாதமே இருக்கும் எம் பி பதவி யை அனைத்து கட்சி கூட்ட தீர்மானப்படி தூக்கி எரிய முடிய வில்லையே ஏன்..?அப்புறம் எதுக்கு தீர்மானம்...தீர்மானம் என்பது ஏமாற்று வேலையே...என்னால் உதவ முடியவில்லை ,,தார்மீக அதரவு மட்டும் தர முடியும் என சொல்ல வேண்டியதுதானே...தமிழனுக்காக உயிரை கொடுப்பேன்...என எதற்கு வீர அறிக்கை....கவிதை ...கவிதை பாடினால் ...சிங்களன் தமிழச்சியை கற்பழிக்காமல் விட்டு விடுவான....தமிழின தலைவர் என எதற்கு பட்டம் .......போரை நிறுத்த சொல். இல்லையேல் .அதரவு வாபஸ் என கொதிக்க வேண்டியதுதானே...தமிழ் நாட்டுக்கும் ..இலங்கை தமிழனுக்கும் பலனில்லாமல் ராசா இரண்டாயிரம் கோடி சம்பாதிக்க தான் அந்த மத்திய பதவி பயன்பட்டது ..
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போது மற்ற கட்சிகள் செய்ததைவிட,//
மாற்ற கட்சி கல் ஆட்சியில் இருக்கும் போது விட இப்போது இலங்கை தமிழர் தாக்கப்படுவது அதிகம் /மாற்ற கட்சி ,,விட இப்போது மத்திய அரசில் ...தமிழக அரசின் பங்கு அதிகம்...அதுதான் அனைவரும் கலைஞரை எதிர்பார்க்க காரணம்/
தங்கள் வருகைக்கு மிகவும் சந்தோசம் ...
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க பதிவிலும் பதில்களிலும் கலைஞரின்மேல் உள்ள காழ்ப்புதான் வெளிப்படுது :(
நீங்க திறந்தமனசோடு இந்தப் பிரச்சனையை அணுக விரும்பலைன்னு நினைக்கறேன்.. சரி.. பரவாயில்லை.. அவரவர் அரசியல் அவரவர்க்கு!
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க பதிவிலும் பதில்களிலும் கலைஞரின்மேல் உள்ள காழ்ப்புதான் வெளிப்படுது :(//
நிச்சயமாய் இல்லை ..கலைஞர் மீது நான் மதிப்பு வைத்துள்ளேன்.போரை உடனே நிறுத்த ..அவர் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.இன்று அவரின் வேண்டுகோளை ஏற்று ,விடுதலை புலிகள் போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர் ...அதே போல் கலைஞர் எம்.பி பதவிகளை தீர்மானித்தின் படி ராஜினாமா செய்வாரா ....முகர்ஜி வந்து போனதும் மனம் மாறியது ஏன்....
நாகையில் இன்றும் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்டனர்.அதற்காக ஆவது .மத்திய அரசை கண்டிக்க சொல்லலாமே....
லாலு தன் மக்கள் தாக்க படுவதற்கே தன் கட்சினரை ராஜினாமா செய்ய சொல்கிறாரே..இங்கே நம் மக்களை சுட்டு கொள்ளும் சிங்களரை கண்டிக்க சொல்லி மத்திய அரசை நிர்பந்திக்க கூடாதா,,,
Post a Comment