ஆர்.கே.சதீஷ்குமார்

உங்ககிட்ட சொல்ல விரும்பியது .....

Wednesday, October 22, 2008

இலங்கை தமிழனுக்கே சொந்தம் ..வை.கோ வீர உரை






."ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் ம.தி.மு.க., சார்பில் கருத்தரங்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள், இரண்டு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டன.



கூட்டத்தில் ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப் பன் பேசியதாவது:



புலிகளை பயங்கரவாதிகள் என, தமிழ் துரோகிகள் சொல்கின்றனர். அகிம்சை போராட்டத்தில் வெற்றி பெறாததால் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு, தனி நாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் மலரும்.இந்திய இறையான்மையை பிரதமரும், முதல்வரும் காப்பாற்ற மாட்டார்கள். அனைத்து கட்சிகள் கூட்டத்தின் முடிவின்படி 29ம் தேதி ராஜினாமா கடிதம் யார் கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். "பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டதால், தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என முதல்வர் கருணாநிதி அப்போது சொல்வார்.இலங்கைக்கு அளித்துவரும் ராணுவ உதவியை திரும்பப் பெற வேண்டும். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தனி ஈழத்திற்கு உரிய மரியாதையை தர வேண்டும்.இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:



பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு; தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன் முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது, அதற்கு ஆதரவு அளித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். "இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மாட்டேன்' என்று பிரதமர் எனக்கு அளித்த வாக்குறுதியை நம்பினேன்; ஆனால், அவர் ஏமாற்றிவிட்டார்.



துரோகத்திற்கு என்ன தண்டனை? : புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்திய ராணுவம் தகர்த்தது. கடல் புலிகளை அழிக்க இந்திய ராணுவம் தகவல் கொடுத்து உதவியது. நான்கு ஆண்டுகளாக புலிகளை அழிக்க, இந்தியா திட்டமிட்டு ராணுவ உதவி செய்துள் ளது. இலங்கையின் இனப்படுகொலைக்கு இந்திய ராணுவம் உதவுகிறது.இந்திய அரசின் துரோகத்திற்கு என்ன தண்டனை? இலங்கையின் உள் நாட்டு பிரச்னைக்கு இந்தியா ஏன் ஆயுத உதவி செய்கிறது? தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத் திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக் கும் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு.



ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை : மத்திய அரசு செய்த துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்? இலங்கையில் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். அதைத் தடுத்தது இந்தியா தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை.
இலங்கையில் ஒருமைப்பாட்டைக் காக்க, இந்தியாவின் ஒருமைப் பாட்டை குலைத்துவிடாதீர்கள். இந்தியா, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். துன்பியல் நிகழ்வுகளை பற்றி பேசாதீர்கள். போரை நிறுத்துங்கள். உலகில் அனைத்து நாடுகளும் புலிகளுக்கு தடை போட, இந்திய அரசு தான் காரணம்.இலங்கைத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால், வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன். தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால், அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவர். தமிழ் ஈழம் மலரும்; அதுவே எங்கள் தாகம்.



இவ்வாறு வைகோ பீசின

it



Labels: , ,

6 Comments:

  • At October 22, 2008 2:04 AM , Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    நாகரீகமான விமர்சனம் செய்.யுங்க

     
  • At October 22, 2008 2:06 AM , Anonymous Anonymous said...

    நாகரீகமான விமர்சனம் செய்.யுங்க

     
  • At October 22, 2008 2:10 AM , Anonymous Anonymous said...

    நாகரீகமான விமர்சனம் செய்.யுங்க

    October 22, 2008 2:06 AM

     
  • At October 22, 2008 2:47 AM , Blogger stanjoe said...

    Dear Sir,

    Vaiko veera Urai will be a biggest joke of the year.
    One side he will say "Jaya vi pashisha aatchi" next side he say "AnbuSahodri".

    What can we expect from the Joker of the year 2006 election.?

    Just ask him whether his "AnbuSahodri Selvi J.Jayalalitha" is OK with this statement or not.

    He can not win a single seat by contesting alone, you taking his word and all seriously. Do you know how many votes he got in Sivakasi Parliament elction.?

     
  • At October 22, 2008 5:07 AM , Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

    மற்ற கொள்கையில் அவர் எப்படியோ;ஆனால் ஈழ தமிழர் விசயத்தில் அவர் ஒரே நிலைபாடுதான்;

     
  • At October 22, 2008 9:58 AM , Blogger குப்பன்_யாஹூ said...

    I echo Stanjoe's comments. Vaiko can do only talks in stages. Without Amma he cant get 3 digit votes.


    One thing you all understand, for Tamilnadu Politicians now LTTE issue is a tool to hide electricity cut issue.

    No one is seriously interested on Eelam or LTTE or Tamil people.

    Kuppan_yahoo

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home