சனிகிழமையில் மதியம் பனிரெண்டு மணிக்கு தமிழ்மணத்தில் ...மேய்ந்து கொண்டிருந்தேன் ..வழக்கம்போல என்னை பற்றி எந்த பதிவரும் பதிவு போட வில்லை ..போன் மணி அடித்து அடித்து இம்சை செய்தது .ஹல்லோ என்றேன் ..
ஹல்லோ ...எங்க இருக்கீங்க ..என்றது ஒரு குரல் ...
என்ன வேணும் ...யார் நீங்க .....-நான் .
சரத்து சதீஸ் தானா ..எங்க இருக்கீங்க -மறுபடியும் குரல் மிரட்டல் தொனியில் இருந்தது ..
நீங்க யாருங்க முதல்ல சொல்லுங்க ..நான் கடுப்பானேன் .
நான் ஒரு வெட்டி பயங்க ..வாழ் பைய்யான்னுகூட சொல்லுவாங்க ....என்றார் ..
எனக்கு இன்ப அதிர்ச்சி ....அட நம்ம வால்பைய்யன் ..ஈரோடு இல் இருந்தும் இன்னும் சந்திக்க முடிய வில்லையே என நினைப்பேன் ..கூடுதுறை ஒரு முறை வால்பைய்யனை சந்திக்க போலாம் வாங்க என அழைத்தும் போக முடிய வில்லை ..இன்னும் கூடுதுறையை பார்த்த தில்லை என்பது தனி கதை .
சார் நீங்க போனே பண்ணினது ரொம்ப சந்தோசம் ,,என்ன விஷயம் ?என்றேன் .
அட ,,சாரு..மொரு..எல்லாம் வேண்டாம் ..இப்போ உடனே கிளம்பி வாங்க ...கிருஷ்ணகிரி ல இருந்து கும்கி ..வந்துருக்காரு.சந்திக்கலாம்.என்றார்.
உடனே வரேன் என்று ஈரோடு சென்று போன் அடித்தேன் .அபிராமி தியேட்டர் எதிர்த்த சந்து..வாங்க ன்னார்.போனேன்...நரைத்த தலையோடு(பித்த நரை தான் ..சனிக்கிழமை என்னை தேசு குளிங்க பாசு ) மாடர்ன் பேன்ட் போட்டு கொண்டு ,,,ஹாய்..என்று செம ஸ்பீடாக வந்தார் ..
போனது, நேராக ஒரு ஒயின்ஸ் சாப் .எனக்கு சங்கடமாக இருந்தாலும் ..வால்பையன் கூட பேச போகிறோம் என்று சந்தோசம்.அதனால் எதுவும் நினைக்க வில்லை .
அங்கு கும்கி அமர்ந்திருந்தார்.ஹை என்றார் ..அப்புறம் சதீஸ்..நேங்க என்னை குடிகாரன் என்று என்னை ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தீங்க.அது தப்பு.குடிபழக்கம் என்பது.காபி குடிப்பது போல ஒரு பழக்கம் ,அதை எப்படி நீங்க சுட்டி காட்டி பெரிய தப்பு போல பேசலாம் என்றார்.
தவறு தான் வருந்துகிறேன் என்றேன் ..
ரஜினியை தாக்கி ஒரு பதிவர் எழுதியதை ..நீங்க தனி மனித தாக்குதல் தவறு என எழுதியது சரிதான்.எனக்கு பிடிச்சிருந்தது ...உங்க கருத்து தான் என் கருத்தும்,என்றார்
சாபுடுவீங்களா ....
இல்லை பாஸ் வேணாம் ..நான்
பரிசல்கரனுடன் கும்கி போனில் பேசிக்கொண்டிருந்தார் /
வால் பைய்யன் @அருண் ....ஆமா.. நியூ மரலாஜி பத்தி எழுதுறீங்களே அது உண்மையா ...அதன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை அது ஒரு மோசடி வேலை என்றார்.
நான் சூழ்நிலையை நினைத்து பரிதாபமாக அவரை பார்த்து ...சில பேருக்கு நம்பிக்கை இருக்கு ..அவங்களுக்காக எழுதுறேன் ...என்றேன்
உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா உட்ருங்க பாஸ் (என்னை )என்றேன் .
சரி உங்க வயசு என்ன என்றேன் .சரி பலன் தான் சொல்ல போகிறேன் மடக்கலாம் என நினைத்தார் போலும்..அவசரமாக..பதினாலு.பத்து.எழுபத்தி எட்டு என்றார். அப்படியா என செய்தி போல கேட்டு விட்டு அமைதி ஆகி விட்டேன் ..
அவசரமாக ஒரு அழைப்பு வந்தது .நான் கிளம்ப வேண்டிய சூழ்நிலை.
அதற்குள்நான் கிளம்பறேன் என்றேன்
சாப்பிட்டு விட்டு தான் போக வென்று கட்டாய படுத்தினார் .இல்ல தலைவரே புரட்டாசி சனிக்கிழமை ..வீட்ல தான் சாப்பாடு என வந்துவிட்டேன் ..
நல்ல நண்பர் வால்பையன் ...அடுத்த முறை எங்க ஊரில் ஈரோடு மாவட்ட பதிவர்கள் அனைவரையும் சந்திப்பு நடத்தி அட்டகாசமாக ..பார்ட்டி கொண்டாடி ,கலக்கலாமா ...என்றேன்
.கண்டிப்பாக ...ஜாலியா கூத்தடிப்போம் என்றார்
கும்கி யுடன் அதிகமாக பேச முடியவில்லை.
Sunday, October 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)






15 comments:
//அபிராமி தியேட்டர் எதிர்த்த சந்து..வாங்க ன்னார்.போனேன்//
இதை படிக்கும் போதே நினைத்தேன்.. அந்த சந்துல ஒயின்ஷாப் தான இருக்கு.. சாயங்கால வேளை போல.. சரக்கடிக்க ஒன்னு கூடி இருப்பாங்கன்னு.. சரியாத்தான் இருக்கு.. :))
வாங்க சஞ்சய் ...
இதை படிக்கும் போதே நினைத்தேன்.. அந்த சந்துல ஒயின்ஷாப் தான இருக்கு.. சாயங்கால வேளை போல.. சரக்கடிக்க ஒன்னு கூடி இருப்பாங்கன்னு.. சரியாத்தான் இருக்கு.. :))//
அதை பத்தி எனக்கு தெரியாது ..என்னமோ தினசரி கூடுறது மாதிரி சொல்றீங்க ..ஒ..அப்போ பொடியனை அந்த பக்கம் பாக்கலாம் போல ..
வாலபையனை பார்த்துட்டு சும்மா வந்தீங்களா? ஆச்சரியம்தான்.. சரி எப்படி இருக்காரு ப்ளீச்சிங் பவுடர்? ஆவ்வ்வ்வ் வால்பையன்..
உளறீட்டேனா சகா?
அதை இப்படி கேக்கணும் கார்க்கி..
"எப்படி இருக்காரு வால்பையன் (அ) ப்ளீச்சிங் பவுடர் (அ) நல்லதந்தி?"
உளறீட்டேனா சகா?//வாங்க நண்பா ....நான் என்ன கேட்கிறதுன்னு தெரியாம அவசரமா வந்துட்டேன் ..ஆனா அடுத்த முறை கண்டிப்பா கேட்ருவேன்...
அதை இப்படி கேக்கணும் கார்க்கி..
"எப்படி இருக்காரு வால்பையன் (அ) ப்ளீச்சிங் பவுடர் (அ) நல்லதந்தி?"//
வாங்க ஆதவன்...எனக்கும் அந்த சந்தேகம் உண்டு..
ஒரு பதிவர் 4 அல்லது 5 அடையாளங்களில் (பதிவர் பெயர்களில், BLOGGER NAME ) எழுதுவதில் எந்த தவறும் இல்லை. இது புதிய விசயமும் இல்லை.
அண்ணாதுரை அவர்களே 30 புனை பெயர்களில் எழுதி உள்ளார். (கான்சீபுரத்தான், வழிபோக்கன், ஊர்சுற்றி, சாமன்யன், பாமரன், சௌம்யன், கருஞ்சட்டைகாரன், ).
சுஜ்தாவும் எழுதி இருக்கிறார் (ரங்கராஜன், எச் ஆர், ரங்கதான், மேலச்சித்திரை).
சாட் உலகிலும் ஒரு நபர் 3 அல்லது 4 ID KALIL வருவார்கள். அவர்களின் பன்முக தன்மை, பலகொனகளைல் சிந்திக்கும் போக்கையே இது வெளிப்படுத்துகிறது.
ஆதலினால் எல்லாரும் பல புனைபெயர்களில் எழுதுங்கள்.
குப்பன்_யாஹூ
//அதை இப்படி கேக்கணும் கார்க்கி..
"எப்படி இருக்காரு வால்பையன் (அ) ப்ளீச்சிங் பவுடர் (அ) நல்லதந்தி?" //
"எப்படி இருக்காரு வால்பையன் (அ) ப்ளீச்சிங் பவுடர் (அ) நல்லதந்தி (அ) பக்கி லுக் ?"
நண்பர் சதீஷ் குமார்!
அன்னைக்கு கொஞ்சம் உங்களை ஓவராகத் தான் ஓட்டி விட்டேன்.
மன்னிக்கவும்.
எனது பிறந்த நாளாக நீங்கள் குறிப்பிட்டு இருப்பது தவறு
நான் ஏப்ரல் மாதம் பிறந்தவன்.
நீங்கள் சொல்லியிருக்கும் நாளில் பிறந்தவர் ப்ளீச்சிங் பவுடர்.
நான் சித்திரை ஒண்ணாம் தேதி பிறந்தேன். அடையாளத்திற்கு தமிழ் வருடப்பிறப்பு என்று சொல்லிவந்தேன். அரசு தை முதல் தேதியை வருடப்பிறப்பாக அறிவித்து விட்டதால் அன்று நல்லதந்திக்கு பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
சந்திப்பு பதிவிர்ற்கு நன்றி
//கூடுதுறை ஒரு முறை வால்பைய்யனை சந்திக்க போலாம் வாங்க என அழைத்தும் போக முடிய வில்லை ..இன்னும் கூடுதுறையை பார்த்த தில்லை என்பது தனி கதை .//
இது இன்னும் சூப்பர்
//Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதை இப்படி கேக்கணும் கார்க்கி..
"எப்படி இருக்காரு வால்பையன் (அ) ப்ளீச்சிங் பவுடர் (அ) நல்லதந்தி?"//
வாங்க ஆதவன்...எனக்கும் அந்த சந்தேகம் உண்டு..//
எதற்கு இந்த வேண்டாத வேலை...நம் நண்பர்களையே சந்தேகப்படலாமா?... உங்களுக்கு தெரியவேண்டுமா? உடனே போனில் கூப்பிட்டு கேட்டுவிடலாமே...
இதற்க்காக இப்படிபின்னுட்டமிட்டு அசிங்கப்படுத்தாதீர்
எதற்கு இந்த வேண்டாத வேலை...நம் நண்பர்களையே சந்தேகப்படலாமா?... உங்களுக்கு தெரியவேண்டுமா? உடனே போனில் கூப்பிட்டு கேட்டுவிடலாமே...
இதற்க்காக இப்படிபின்னுட்டமிட்டு அசிங்கப்படுத்தாதீர்//
நான் தமாசாக தான் சொன்னேன்.அப்படி ரொம்ப முக்கிய கேள்வியாக இருந்தால் கேட்டு விட்டு போகிறேன்?வருகைக்கு நன்றி பாஸ் ,,,
நண்பர் சதீஷ் குமார்!
அன்னைக்கு கொஞ்சம் உங்களை ஓவராகத் தான் ஓட்டி விட்டேன்.
மன்னிக்கவும். //
ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தலைவரே..நானும் உங்களோட ரொம்ப நேரம் அரட்டை அடிக்க முடியாம போய்டுச்சு ..வருத்தம்தான்//
ஆதலினால் எல்லாரும் பல புனைபெயர்களில் எழுதுங்கள்.
குப்பன்_யாஹூ//
நன்றி நண்பரே...உங்க உண்மையான பெயர் என்ன ?
Post a Comment