லைட்ஸ் ஆன் சுனில்
| விமலாராமன் இயற்கை அம்சம் நிறைந்த அழகான இடங்களை இண்டர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்து அந்த இடங்களுக்குப் போய்வருவதுவழக்கம். (பேக்கைத் தூக்க நான் வரட்டா?) | ![]() |
மும்பை அந்தேரியில் புது வீடு ஒன்றை வாங்கி சமீபத்தில் கிரஹப் பிரவேசம் செய்திருக்கிறார் அஸின். இதற்கு அமீர்கான், சல்மான்கான், ரித்திக்ரோஷன் போன்ற நடிகர்கள் வந்திருந்தார்கள். (தமிழ் ஹீரோக்கள் யாரும் கிடையாதா?)
"கௌதம்மேனன், பாலா, அமீர், லிங்குசாமி, இவர்கள் எல்லோரும் சொந்தமாய் படக் கம்பெனி ஆரம்பித்து விட்டார்கள். இப்போது பேரரசு "மேஜிக் மைண்ட்' என்ற பெயரிலும் சாமி "கனவுத் தொழிற்சாலை' என்ற பெயரிலும் சொந்தமாய் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். (தயாரிப்பாளர் கஷ்டம் இனிமேல்தான் புரியும்!)
"திண்டுக்கல் சாரதி' என்ற படத்தில் கருணாஸுடன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் ஃபுளோரா. போலி பாஸ்போர்ட் புகாரில் கோர்ட், கேஸ் என்று மீடியாக்கள் பெயரை டேமேஜ் பண்ணி விட்டதால் இப்போது சூமயூரி' என்று பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார். (இனிமே டேமேஜ் ஆகாம பார்த்துக்கங்க...)
மாதவன், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர். இதனால் குளித்து முடித்ததும் தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லிவிட்டுதான் மற்ற வேலைகளைப் பார்க்கிறார். அதுமட்டுமில்லை, மகன் வேதாந்த்திற்கு ஸ்லோகங்களும் கற்றுத் தருகிறார். (அட!)
ஆனந்த்பாபு, ராஜேஷ்பாபு, சுரேஷ்பாபு என்று மூன்று மகன்கள் இருந்தாலும் நாகேஷ் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பேரன்,பேத்திகளைப் பார்க்க வேண்டுமென்று சொன்னால் மூவரும் எல்லோரையும் கூட்டி வந்து காட்டிவிட்டுப் போகிறார்கள். (உடம்பு நல்லாருக்கா சார்?)
பிரசன்னா நடிக்கும் படத்தின் பெயர் நாய்க்குட்டி. படத்தில் நாய்க்குட்டி எதுவும் நடிக்கவில்லை. பிரசன்னாவின் பெயர்தான் அது. குழந்தையான அவரை, தாய் குப்பைத் தொட்டியில் நாய்களுடன் நாய்களாக வீசி விட்டுப் போக, அந்தப் பெயர் வந்து விடுகிறது ஹீரோவுக்கு. (புதுசா இருக்கே!)
கே.பாலசந்தர் முன்பு ஜெய்சங்கரை வைத்து இயக்கிய சூநூற்றுக்கு நூறு' மீண்டும் வரப்போகிறது. இதில் விநய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐந்து நாயகிகள். இப்போதைக்கு காதல் சந்தியா கமிட்டாகியிருக்கிறார். "ராஜாதிராஜா'வில் லாரன்ஸுக்கு ஜோடியாக ஐந்து நாயகிகளில் ஒருவராக நடிக்க சந்தியாவை அழைத்தபோது மறுத்தவர், விநயோடு மட்டும் ஒப்புக் கொண்டுவிட்டார். (இது பஞ்ச பாண்டவி சீஸனா?)
பிரமாண்ட படங்களைத் தயாரித்துப் பெயர் வாங்கிய குஞ்சுமோன், இத்தனை நாள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இப்போது மீசையை முறுக்கிக் கொண்டு புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப்போகிறார். வேலைகள் ஜரூராய் நடந்து கொண்டிருக்கின்றன. (உங்க பையன் என்ன பண்றாரு?)
மீராஜாஸ்மின் காலையில் ஷூட்டிங் என்றால் பதினொரு மணிக்குதான் ஸ்பாட்டுக்கே வருகிறாராம். இதனால் ஷங்கர் தயாரிக்கும் படத்திலிருந்து மீராவை கழற்றிவிட்டுவிட்டார்களாம். ஆனால் லேட்டாக வருவதற்கு காரணம் அவருடைய அலட்சியம் இல்லை. அவருக்கு தைராய்ட் சம்பந்தமான பிரச்னை இருப்பதால் காலை ஒன்பது மணி வரை தூங்க வேண்டுமாம். இந்தப் பிரச்னையை வெளிப்படையாக மீரா சொல்லாததால்தான் இந்த கெட்ட பெயர் என முணுமுணுக்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். (நிஜம்தானா மல்லிகையே?)
எம்.ஆர். ராதா நடித்த "ரத்தக் கண்ணீர்' படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்தார் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா. படம் ஹிட் என்பதால் தமிழிலும் ரத்தக் கண்ணீரை ரீ-மேக் செய்து அவரே நடிக்கத் திட்டமிட்டு வருகிறார். (ராதா நடிப்பை இன்னொருத்தர் பண்ணவே முடியாது)
தனது நெருங்கிய நண்பர் வெங்கட்பிரபுவை இயக்குநராக அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி.சரண், அடுத்த வருடம் தானும் இயக்குநராக களமிறங்கப் போகிறார். இதற்காக கதை விவாதத்தில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். எஸ்.பி.பி. சரண். (வருக இளமைப் பட்டாளமே!).







0 comments:
Post a Comment